Role of women in vedic culture
பாரதப் பண்பாட்டில் பெண்களின் பங்கு வழங்கியவர்: http://tamilbtg.com/roles-of-women-bharat-kalachar/ திருமதி. கீத கோவிந்த தாஸி நிலையான, மகிழ்ச்சிகரமான, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் பெண்கள் தூண்களைப் போன்றவர்கள். பாரதப் பண்பாட்டில், பெண்மை என்பது, மரியாதை, பெருமை, கற்பு, வீடு, குடும்பம், அன்பையும் பாதுகாப்பையும் கொடுக்கும் கணவன், களங்கமில்லாத குழந்தைகள் போன்றவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. பெண் தனது இளம் பருவத்தில் பொறுப்பான தந்தையாலும், திருமணத்திற்குப் பிறகு கணவனாலும், முதுமையில் வளர்ந்த மகன்களாலும் பாதுகாக்கப்படுகிறாள்–இதுவே பாரதத்தின் வேதப் பண்பாடு. பாரம்பரியக் கொள்கைகள் அனைத்தும் பாழாகி வரும் இத்தருணத்தில், பெண்களுடைய கடமைகள் குறித்து யாரும் பேசுவதில்லை, யாரும் கேட்பதில்லை, யாரும் நினைத்துப் பார்ப்பதும் இல்லை. “பெண் விடுதலை,” “பெண் உரிமை,” “பெண் புரட்சி,” “பெண் கல்வி” என பல்வேறு விஷயங்கள் சமுதாயத்தில் நிறைந்துள்ளன. இவையனைத்தும் உண்மையில் பெண்மைக்கு நன்மை செய்துள்ளனவா என்றால், சற்று யோசிக்கக்கூடியவர்களின் பதில் நிச்சயம் “இல்லை” என்பதே. வளர்ந்து வரும் பிர...